தாய்நாட்டின் மீதான உண்மையான பற்று பெண்களை மதிப்பதிலேயே உள்ளது – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு…
பெண்களையும் தாய்மார்களையும் மதிக்காத ஒரு சமூகம், தாய்நாட்டின் மீது உண்மையான அன்பையோ மரியாதையையோ கட்டியெழுப்ப முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாத்தளையில் நேற்று (08) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பெண்களின் தியாகங்கள் மற்றும் ஆசீர்வாதங்களின் மேலேயே இந்த நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் ஏற்படும் சவால்களைப் பெண்களே முதலில் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, வாழ்க்கைச் செலவு…
